WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 2, 2017

மாணவர்களுக்கு மார்க் போட உதவும் புதிய தொழில்நுட்பம்.


சென்னை தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) மதிப்பெண்கள், முதன் முறையாக, புதிய தொழில்நுட்பத்தின்
அடிப்படையில், இந்த ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணிகளிலும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள், புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஓ.எல்.ஐ.சி.ஆர்., எனப்படும் தொழில்நுட்பத்தை, ஓரியான் இண்டியா சிஸ்டம்ஸ் எனும் தனியார் நிறுவனம் வழங்கி இருக்கிறது. ஓரியான் இண்டியா சிஸ்டம்ஸ் நிறுவனம், கடந்த 24 ஆண்டுகளாக, பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு தேவையான மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. ஓ.எல்.ஐ.சி.ஆர்., தொழில்நுட்பத்தின் மூலமாக, ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாள்களை மிக எளிதாக மதிப்பீடு செய்ய முடியும். ஆசிரியர்கள் மதிப்பெண்களை வழங்கும்போதே, அந்த மதிப்பெண்கள், டிஜிட்டலாக்கம் செய்யப்பட்டுவிடும். அதனால் தேர்வு துறை, உடனடியாக மாணவர்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, இந்த தொழில்நுட்பத்தால் மாணவர்கள் குறித்த தகவல்கள், 100 சதவீதம் மறைக்கப்பட்டு விடும். கோவா கல்வி துறையும், இந்த ஆண்டு, ஓ.எல்.ஐ.சி.ஆர்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாணவர்களின் தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.