WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 28, 2017

தற்காலிக பேராசிரியர் நியமனம் பாரதியார் பல்கலையில் எதிர்ப்பு : * யு.ஜி.சி., விதிமுறை பின்பற்ற வலியுறுத்தல்.

பாரதியார் பல்கலையில் தற்காலிக பேராசிரியர்கள் நியமனத்துக்கு பதிலாக, யு.ஜி.சி., விதிமுறைப்படி நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?

                                                 சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்.

''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார்.

Sunday, August 27, 2017

உபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்.

நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தற்காலிகமாக, அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி, ’கட்’

                                     

பிளஸ் 1 பொது தேர்வு விதிகள்; விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.

                                           

’செட்’ தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்.

                                                 

Saturday, August 26, 2017

பிளஸ் 1க்கு வினா வங்கி தயாரிப்பு பணிகள் தீவிரம்.

பிளஸ் 1 பொதுத் தேர்வின் புதிய விதிகளின் படி, 32க்கும் மேற்பட்ட, வினாத் தொகுப்பு அடங்கிய வினா வங்கி வெளியிடப்படுகிறது.
தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1ல், பிளஸ் 2வுக்கான வகுப்புகளை நடத்தியதால், மாணவர்கள் போட்டி தேர்வுகள், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. 

பிளஸ் 1 மாதிரி வினாவில் ’பெரிய’ மாற்றங்கள்.

’நீட்’ தேர்வை தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டம், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. 

மேல்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 1990-ல் பிறப்பித்த அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் தொடக்க கல்வி அலுவலர்கள் உத்தரவு.

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின், ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, மாவட்ட தொடக்கக் கல்வி அலு

வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்.

புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல் முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு

வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்.

புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல் முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள்

Friday, August 25, 2017

Big News: பள்ளி கல்வி துறை செயலர் மாற்றம்.


பள்ளி கல்வித்துறை செயலர் உதய சந்திரன் உட்பட, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பள்ளி கல்வித்துறை செயலராக

Thursday, August 24, 2017

'செட்' நுழைவு தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு.

உதவி பேராசிரியர் பணிக்கான, மாநில அளவிலான, 'செட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கல்லுாரிகளில்

'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்.

'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

பிளஸ் 2 துணை தேர்வு செப்., 25ல் துவக்கம்.

'பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு, செப்., 25ல் துவங்கும்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. பள்ளியில், தற்போது படிக்கும் மாணவர்களை தவிர, ஏற்கனவே படித்து தேர்ச்சி

Wednesday, August 23, 2017

செட் தேர்வு முடிவில் வெளிப்படை தன்மை மறைக்கபடுவதன் பின்னணி என்ன?

தற்போது அன்னை தெரசா பல்கலை கழகம் தான் நடத்திய செட் தேர்வின் முடிவினை கடந்த வாரம் வெளியிட்டது. தற்போது  வெளியிட்ட தேர்வுமுடிவிலும் சென்ற ஆண்டு வெளியான தேர்வு முடிவிலும் வெளிப்படைத்தன்மை கடை பிடிக்காமல் இருப்பது  பணம் ( 3 இலட்சம் முதல் 4 இலட்சம் ) கொடுக்கபட்டு தேர்வு முடிவுகள் மாற்றபட்டிருக்க வாய்ப்பு உள்ளது என கல்வியாளர்கள் கருதுகின்றனர். அது மட்டுமல்லாமல் வேலூர் மண்டலத்தில் நிறைய பேர் தேர்ச்சியடைந்துள்ளனர் இதன் உண்மை தன்மையை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: வெறிச்சோடிய அலுவலகங்கள்; கற்றல்-கற்பித்தல் பாதிப்பு.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளிகளில் கற்பித்தல்- கற்றல் பாதிக்கப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 5-ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அலுவலக பணிகள் பாதிப்பு: போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை, கிராமநிர்வாகம், கல்வித்துறை என அரசுத்துறை சார்ந்த பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. சென்னை தலைமைச் செயலகம், எழிலகம், மாவட்ட ஆட்சியர்அலுவலகங்களில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு விஷயங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கற்றல்-கற்பித்தல் நடைபெறவில்லை: அரசுப் பள்ளிகளில் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வராததால் வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் மட்டும் அரசுப் பள்ளிகளில் பணியில் ஈடுபட்டனர். எனினும் கற்றல், கற்பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மாவட்டங்களில்... பல மாவட்டங்களில் உள்ள ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் மாணவர்கள் வீடு திரும்பினர். வேலைநிறுத்தத்தையொட்டி சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவுப் பணியாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பல பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது. போராட்டங்கள் தொடரும்... வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ. கணேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: போராட்டங்களுக்கு இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் அடுத்தடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால்...தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்குப் பின்னரும் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசுப் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

'நீட்' அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும்.

மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தகுதி காண் நுழைவுத் தேர்வு ('நீட்') அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்துமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனே தொடங்கி செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் அவசர சட்டமும் இயற்றப்பட்டது. இந்நிலையில்தான் அண்மையில் சென்னை வந்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் 'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கிடைக்காது. ஆனால், ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில், மாநில அரசு அவசர சட்ட மசோதா இயற்றினால் மத்திய அரசு உதவி செய்யும்' என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு மட்டும் விலக்கும் அளிக்கும் அவசரச் சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், 'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, 'நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கூடாது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது' என்றார். மத்திய அரசின் வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''நீட்' தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 'நீட்' தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட வேண்டும். இது தொடர்பான மனு முடித்து வைக்கப்படுகிறது. மேலும், தமிழகத்துக்கு மட்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை செப்டம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அனைத்துப் பாடத் திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல், 'நீட்' அடிப்படையிலே மருத்துவர் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்ûகான கலந்தாய்வை உடனே தொடங்கி செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான வழக்கையும் நீதிபதிகள் முடித்து வைத்தனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே, 'ஒவ்வொரு சட்டத் திருத்தமும், ஒரு சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். அதற்காக மாநில அரசு சட்டம் இயற்றக் கூடாதா?' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நீதிபதிகள், 'தமிழக அரசு காலம் கடத்திவிட்டது. இதை முன்னரே செய்திருக்க வேண்டும்' என்றனர். இதற்கு சேகர் நாப்டே, 'நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் சாதகமான பதிலை அளித்துள்ளார்' என்றார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'நீட் விலக்கு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவரசச் சட்டம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) நிறைவேற வாய்ப்புள்ளது' என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் நீட் தேர்வு முறையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயல்பாடும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்று 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள் விவரம், 'நீட்' தேர்வு முடிவு, கிராமப்புற மாணவர்களின் பின்னணி குறித்த தகவல்கள் ஆகியவற்றை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரையிலும் தற்போதுள்ள நிலையே தொடரும்' என தெரிவித்து வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஆகஸ்ட் 22) ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது 'நீட்' அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்.

''வரும், ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி கலைத்திட்ட குழு தலைவர், அனந்த கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். புதிய பாடத்திட்டம் குறித்து, எட்டு மாவட்டங் களுக்கான கருத்தறியும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற கலைத்திட்ட குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:தமிழக பள்ளிகளில், இதுவரை மதிப்பெண் பெறுவதற்காக மட்டும், பாடங்களை நடத்தி வந்துள்ளனர். தேசிய நுழைவு தேர்வு அதனால், படிப்பின் மீது, மாணவர்களுக்கு ஈர்ப்புஇல்லாமல் போய்விட்டது. மேலும், தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியவில்லை.இதை, மாற்றும் வகையில், தமிழக பள்ளிகளில் கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப்படும்; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும். இந்த வகுப்புகளுக்கு, ஜனவரிக்குள், பாடத்திட்ட தயாரிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம். மதிப்பீட்டு முறை தேர்வு முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படும். பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதி மற்றும் செலவு திட்டங்கள், தேர்வு நடத்தும் முறை ஆகியவற்றுக்கும், அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும். கருத்தறியும் கூட்டங்களில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறிய கருத்துக்கள் ஆராயப்பட்டு, அவற்றையும் இந்த பாடத்திட்டத்தில் கொண்டு வர முயற்சிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை'.

பள்ளிக்கல்வி பாடத்திட்டம், மாணவர்களுக்கு அழுத்தம் தருவதாக இல்லாமல், மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும்' என, மாணவ மாணவியர் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வி புதிய பாடத்திட்ட கருத்தறியும் கூட்டம் சென்னையில், நேற்று நடந்தது.இதில், மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் பேசியதாவது: அன்னரத்னா, சென்னை அகர்வால் வித்யாலயா பள்ளி: பாடங்கள் அதிகமாக உள்ளன; அதை குறைத்து மாணவர்களுக்கு, அழுத்தம் தராத, மகிழ்ச்சியான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். வெறும் சமன்பாடுகளை மட்டும் கற்றுத் தராமல், செய்முறை பயிற்சி அளித்தால், பாடம் எளிதில் மறக்காது. பாடங்களில் உள்ள வார்த்தைகளை எளிமைப்படுத்த வேண்டும். திறன் வளர்ப்பு, சமயோஜிதமாக சிந்தித்து பதில் அளிக்கும் முறையை மாணவர்கள் பின்பற்ற, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களை வெறும் புத்தகப்புழுவாக வைத்திருக்காமல், அவர்களை வண்ணத்து பூச்சிகள் போல், விரிவான கல்விக்கு தயாராக்க வேண்டும். யோகலட்சுமி, ராணிப்பேட்டை ராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப்பள்ளி :சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ளது போல், தேர்வு முறையையும், கற்பித்தல் முறையையும் மாற்ற வேண்டும். எளிதாக புரியும் வகையில், பாடங்களை வடிவமைக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, இரண்டுஆண்டுகளுக்கு ஒருமுறை, பாடத்திட்டத்தை புதுப்பிக்க வேண்டும். கங்கா, அரசு பள்ளி மாணவி, வேலுார்: அனுபவங்கள் அடிப்படையிலான கல்வி அமைய வேண்டும். ஆங்கில வழியில் மாணவர்கள் சரளமாக பேசவும், எழுதவும் கற்றுத்தர வேண்டும். வங்கி படிவம், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் உள்ளது. அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும். மற்றவர்களின் உதவியின்றி, சுயமாக வாழ நம்பிக்கை அளிக்கும் கல்வி தேவை. வில்லியம் விஜயராஜா, முதுநிலை ஆசிரியர், காஞ்சிபுரம்: நவீன தொழில்நுட்பத்தை, பாடத்திட்டத்தில் இடம் பெற வைப்பது அவசியம். வேளாண் கல்வி, பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் என, பல்வேறு அம்சங்கள் இடம் பெற வேண்டும். நல்லொழுக்கம், தொழிற்கல்வி, உடற்கல்வியை பிரிக்காமல்,கட்டாய பாடமாக சேர்க்க வேண்டும். பரந்தாமன், பெற்றோர் - -ஆசிரியர் கழக தலைவர், செஞ்சி: இயற்கை வளம் குறித்த தகவல்கள், பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும்.ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு பாடத் திட்டம் என, தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வியாக ஏற்படுத்த வேண்டும். பிளஸ் 2வுக்கு கருத்தியல் தேர்வு நடத்திய பின், செய்முறை தேர்வு நடத்த வேண்டும். கிருஷ்ணகுமார், ஆசிரியர், திருவள்ளூர்: வினாத்தாள் தயாரிப்பு முறை மாற வேண்டும். தமிழ், ஆங்கில தேர்வில், இரண்டு தாள்களை ஒன்றாக்க வேண்டும். புத்தகங்களில் இல்லாத அம்சங்களை, தேர்வில் இடம் பெற வைத்து, 'கைடு'களை படிக்கும் நிலையை உருவாக்கக் கூடாது. சுகபாலா, இந்திய மாணவர் சங்கம்: பாடங்களில் ஜாதி, மதம், இன உணர்வுகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் கருத்துக்கள் இடம் பெறக்கூடாது. அனைத்து பாடங்களும், விஞ்ஞானம் மற்றும் சரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். சுதந்திர போராட்டம் குறித்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில், இடைச்செருகல் இன்றி உண்மையாக இருக்க வேண்டும். இவ்வாறு பலரும் கருத்து தெரிவித்தனர்.

காலாண்டு தேர்வு செப்., 11ல் துவக்கம்.

பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, செப்., 11 முதல் காலாண்டு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், '௧௦ முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, செப்., 11ல் காலாண்டு தேர்வு துவங்கும். செப்., 23ல் தேர்வு முடிந்து விடுமுறை விடப்படும்' என, கூறப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை விபரம், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் 64 சதவீத இடங்கள் காலி : அண்ணா பல்கலை இன்ஜினியரிங் படிப்பு.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழியில், 64 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 518 இன்ஜி., கல்லுாரிகளில், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23 முதல், ஆகஸ்ட், 11 வரை, கவுன்சிலிங் நடந்தது. ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 352 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்; 48 ஆயிரத்து, 583 பேர் பங்கேற்கவில்லை; 86 ஆயிரத்து, 355 மாணவர்கள், பல பாடப்பிரிவுகளில் ஒதுக்கீடு பெற்றனர். மீதமுள்ள, 89 ஆயிரத்து, 101 இடங்கள், மாணவர்கள் இன்றி காலியாக உள்ளன. இதில், தனியார் கல்லுாரிகளில், 88 ஆயிரத்து, 161; அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லுாரிகளில், மூன்று; அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், 937 இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலையின், 12 உறுப்பு கல்லுாரி களில், தமிழ் வழியில், மெக்கானிக்கல், 718; சிவில் பிரிவில், 660 இடங்கள் கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்டன. அவற்றில், 36 சதவீதமான, 493 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; மீதம், 64 சதவீதமான, 885 இடங்கள் காலியாக உள்ளன. குறைந்த கல்வி கட்டணம், இலவச விடுதி வசதி, வேலைவாய்ப்பு வளாக நேர்காணல் போன்ற சலுகைகள் இருந்தும், ஆங்கில வழி பாடம் இல்லை என்பதால், தமிழ் வழி இடங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் சேரவில்லை. அதே நேரத்தில், ஆங்கில வழியில் தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் செலுத்தி, பல மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து இது அண்ணா பல்கலை இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: இன்ஜி., படிப்பில், ஆங்கில வழியில் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம், மாணவர்களிடம் உள்ளது. தமிழ் வழியில் படித்தாலும், அதே வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ் வழி மாணவர்கள், ஆங்கிலத்திலும் தேர்வு எழுதலாம். அவர்களின் சான்றிதழில், தமிழ் வழி என, குறிப்பிடப்படுவதும் இல்லை. அதனால், ஆங்கில வழியில் அரசு கல்லுாரிகளில் இடம் கிடைக்காவிட்டால், தமிழ் வழியில் சேரலாம். அது போல, தமிழ் வழியில் படித்தால், தமிழக அரசுத் துறை பணிகளிலும்முன்னுரிமை கிடைக்கும். இவ்வாறு அவர்கள்கூறினர்.

Tuesday, August 22, 2017

TNSET- 2017 RESULTS PUBLISHED .

TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET 2017)
Nodal Agency - Mother Teresa Women's University-Kodaikanal
HomeAboutContact
  

QUARTERLY EXAMINATION TIME TABLE FOE X XI XII STD.

ANNUAL EXAMINATION TIME TABLE FOR X XI XII STD MARCH 2018.


அரசு பள்ளிகளில் பாடம் நடத்த தற்காலிக ஆசிரியருக்கு உத்தரவு.

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேரும் பணிக்கு வந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களின், 25க்கும் மேற்பட்ட சங்கத்தினர் அடங்கிய, 'ஜாக்டோ' கூட்டமைப்பும், அரசு ஊழியர்களின், 'ஜியோ' கூட்டமைப்பும் இணைந்து, இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளன.

பிளஸ் 2 தேர்வில் மாற்றமில்லை.

'பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் வினாத்தாள் முறையில், மாற்றம் இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

Monday, August 21, 2017

நாளை அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பூட்டு::போராட்டத்தை முடக்க அதிகாரிகள் முடிவு.

                                        நாளை அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பூட்டு::போராட்டத்தை  முடக்க அதிகாரிகள் முடிவு

அரசு ஊழியர்கள் நாளை 'ஸ்டிரைக்' : அரசு அலுவலகம், பள்ளிகள் முடங்கும் அபாயம்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடு கின்றனர். அதனால், அரசு அலுவலகங்கள், அரசு 
பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Sunday, August 20, 2017

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு.

'தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.

சென்னை, அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம், 700 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான,

Saturday, August 19, 2017

கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் ஒயிட்னருக்கு கட்டுப்பாடு.

"கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் 18 வயதுக்குட்பட்டோருக்கு ஒயிட்னர் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது

ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும், 21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் கருத்துகளை கேட்க உள்ளது.

ஆசிரியர், மாணவர் குறை தீர்க்க கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., அறிவுரை.

பல்கலை மற்றும் கல்லுாரிகளில், புகார் பெட்டி வைத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குறைகளை தீர்க்குமாறு, துணைவேந்தர்களுக்கு, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., 

ஆக., 22ல், 'ஜாக்டோ - ஜியோ ஸ்டிரைக்' : ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை.

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நடத்தும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என,

கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு.

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாநில அரசு

தலைமை செயலர் மிரட்டல்: அஞ்ச மாட்டோம் : அரசு ஊழியர் சங்க தலைவர் உறுதி.

''தலைமை செயலாளர் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்'', என ஜாக்டோ- - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கட்டாயம் : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., கண்டிப்பு.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் இணைப்பு பெற்ற 
பள்ளிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை கட்டாயம் நடத்த வேண்டும் என, உத்தர

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு.

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

Friday, August 18, 2017

மீண்டும் புத்துயிர் பெற்ற பள்ளிக்கல்வி புதிய திட்டங்கள்!

அரசியல்வாதிகளின் தலையீடுகளால், இரண்டு வாரங்களாக பள்ளிக்கல்வி பணிகள் முடங்கியுள்ளன.
அமைச்சர் செங்கோட்டையனின் நேரடி ஆய்வை தொடர்ந்து, முட்டுக்கட்டை ஆசாமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதனால், மீண்டும் பள்ளிக்கல்வி பணிகள் புத்துயிர் பெற்றுள்ளன.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி.

தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

பிளஸ் 1 பொது தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு.

தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: 

அரசு பள்ளி ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது!

                                        

Thursday, August 17, 2017

தமிழகத்தில் நவ., 5ல் தேசிய திறனறி தேர்வு.

ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு, தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என,

டிப்ளமா இன்ஜி., புதிய பாடத்திட்ட விபரம் வெளியீடு.

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜி., படிப்பில், பழைய பாடத்திட்டங்களுக்கு மாற்றாக, புதிய பாடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில், 41 அரசு கல்லுாரிகள் உட்பட, 511

முறைகேடுக்கு முற்றுப்புள்ளி : ஆன்லைனில் பி.எட்., சேர்க்கை.

பி.எட்., படிப்பு நடத்தும் கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை அனுமதி வழங்குவதில் முறைகேடு நடக்காமல் தடுக்க, 'ஆன்லைன்' முறையை, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை 

முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு.

இரண்டு லட்சம் பேர் எழுதிய, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில், 3,375 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஜூலை, 2ல் தேர்வு நடந்தது. இதில், 2 லட்சத்து, 99 பேர் பங்கேற்றனர். இந்த பணி நியமனத்தில், அரசின் விதிகளின் படி, மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முடிவில், மாற்று திறனாளிகளுக்கு, நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 28, 29ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அது பற்றிய விபரங்கள், டி.ஆர்.பி.,யின், trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தலைவர், ஜெகநாதன் தெரிவித்துள்ளார். இந்த தேர்வில், சரியான விடையை தேர்வு செய்யும், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம் பெற்றன. கம்ப்யூட்டர் ஸ்கேனர் மூலம் திருத்தும் வகையிலான, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. விடைத்தாளில், வினாத்தாளின் வரிசை குறியீட்டு எண்ணை, 'ஷேட்' செய்ய வேண்டும் என, அறி வுறுத்தப்பட்டிருந்தது.மதிப்பீட்டு பணியின் போது, பலர் வினாத்தாள் வகையை, 'ஷேட்' செய்யவில்லை என, தெரிய வந்தது. அதனால், அவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், வினாத்தாள் குறியீட்டு எண்ணை எழுதியவர்களின் விடைத்தாள்கள், மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு

Wednesday, August 16, 2017

தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசர சட்டம் மத்திய அரசு இன்று ஆய்வு.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கோரப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்ட வரைவு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று ஆய்வு செய்கிறது.

இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்

இன்ஜி., கல்லுாரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு இழுபறி; இப்போதைக்கு முடிவுறாது!





மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வான, 'நீட்'டில் இருந்து விலக்கு கோரும், அவசர சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்கு தொடர்வதற் கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

'ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த தனியாக நிதி ஒதுக்க வேண்டும்' அப்துல்கலாம் விருது பெற்ற தியாகராஜன் வேண்டுகோள்.

''தமிழக அரசு புதிய பாட்டத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதோடு, அதற்கேற்ப ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும். இதற்காக தனியாக நிதி ஒதுக்க வேண்டும்,'' என, தமிழக அரசின் அப்துல்கலாம் விருது பெற்ற, விஞ்ஞானி தியாகராஜன் தெரிவித்தார்.

பாடத்திட்டம் உருவாக்க செப்., 5ல் கருத்தாய்வு.

பாடத்திட்டத்தை உருவாக்கும் கலைத்திட்டக் குழுவின், கருத்தாய்வுக் கூட்டம், செப்., 5ல், சென்னையில்

Monday, August 14, 2017

யூஜிசி, ஏஐசிடிஐ-யை மாற்றும் முடிவை தள்ளிவைத்தது மத்திய அரசு.


பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஐ) ஆகியவற்றுக்கு மாற்றாக

நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்.


நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன.இந்திய மறைந்த ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி,

748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்.


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட

பிளஸ் 1ல், 'சென்டம்' வாங்க வாய்ப்பு.

''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு மூன்று சீருடை களாக அதிகரித்து வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. முதல்வரின் அனுமதியுடன், 1 முதல் 5ம் வகுப்பு; 6 முதல் 10ம் வகுப்பு; பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை என, மூன்று வகையிலான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பிளஸ் 1 தேர்வை பொறுத்த வரை, மாணவர்களுக்கு சிலசந்தேகங்கள் இருக்கும். இரண்டரை மணி நேரம் தேர்வு எழுவதற்கு ஏற்ப, வினாத்தாள் தயாரித்து இருக்கிறோம். இதற்காக வழங்கப்படும் வினாத்தாள்களை கொண்டு, ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். இதன் மூலம் பிளஸ் 1 மாணவர்கள் அனைவருமே, நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

'நீட்' தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு... ஓராண்டு.

தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, அவசர

Sunday, August 13, 2017

கலை அறிவியல் கல்லூரிகளில் 250 புதிய பாடப்பிரிவுகள்.

''நடப்புக் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 250 புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளன,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர,் அன்பழகன் தெரிவித்தார்.

தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க தொழில்நுட்பம்.

தமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மன் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டு களாக மாற்றப்படாத,பிளஸ் 1,

Saturday, August 12, 2017

'குரூப் - 1' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு.


சப் - கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, 74 பணியிடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வின், இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக

பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து: பாடத்திட்ட குழு தலைவர் வரவேற்பு.


''பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது என்பது, வரவேற்கத்தக்கது. இதை சரியான வழியில் முன்னெடுத்து செல்ல

பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு 7.8 சதவீத வட்டி.

பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட

9, பிளஸ் 1 வகுப்பில் சேர செப்., 30 வரை அனுமதி.


தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1ல், செப்., 30 வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, August 9, 2017

Tuesday, August 8, 2017

பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை 'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டி.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கருத்து கேட்க, 'முதல்வன்' பட ஸ்டைலில், கருத்து

பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும் ௨ ஊக்க ஊதிய உயர்வு : பள்ளி கல்வித் துறை உத்தரவு.

நான்கு ஆண்டுபோராட்டத்திற்கு பின்பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கும், உயர்கல்விக்கு ௨ ஊக்க ஊதிய உயர்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உயர் கல்வி தகுதிகளுக்கு ௨ ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., (அ) எம்.எஸ்சி.,க்கு முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., க்கு இரண்டாவது ஊக்க ஊதியமும் பெற்று வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் பல்கலை.,கள் தொலைதுாரகல்வியில் இருந்து எம்.எட்.,ஐ நீக்கின. இதனால்ஆசிரியர்கள் தொலைதுார கல்வி மூலம் எம்.எட்., படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எம்.எட்.,க்கு பதிலாக எம்.பில்., (அ) பி.எச்டி., முடித்திருந்தாலும் ௨வது ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என, 2013, ஜன.,1 ல் பள்ளி கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. தமிழாசிரியர்களை பொறுத்தவரை பி.லிட்., முடித்தோர் எம்.ஏ.,க்கு ஒரு ஊக்க ஊதியமும், பி.எட்.,க்கு இரண்டாவது ஊக்க ஊதியமும் பெற்று வந்தனர். ஆனால் பி.ஏ., பி.எட்., முடித்து பட்டதாரி தமிழாசிரியராக சேர்ந்தோருக்கு எம்.ஏ.,க்கு மட்டும் ஒரே ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வந்தது.'மற்ற பட்டதாரி ஆசிரியர்களைப்போல் தங்களுக்கும் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,' என வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதையடுத்து ஒரு ஆசிரியர் தங்களது பணிக்காலத்தில் உயர்கல்விக்கு ௨ ஊக்க ஊதிய உயர்வு பெறலாம். அதன்படி பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் எம்.எட்., (அ)எம்.பில்., (அ) பி.எச்டி முடித்திருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம். இந்த உத்தரவை அரசாணை வெளியிட்ட 2013, ஜன.,1லிருந்து செயல்படுத்த வேண்டுமென, பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கல்லூரிகளை போல் பள்ளிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து : நுழைவுத்தேர்வை சமாளிக்க 'தினமலர்' வெளியீட்டாளர் ஆலோசனை.

தமிழக மாணவர்கள், அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும் வகையில், பள்ளிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு, தமிழக அரசுக்கு, 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய பாடத்திட்ட தயாரிப்புக்கு உதவும் வகையில், 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி, கருத்துரு ஒன்றை உருவாக்கி உள்ளார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனை நேரில் சந்தித்து, புதிய பாடத்திட்ட கருத்துருவை வழங்கினார். இதுகுறித்து, பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரனையும், பாடத்திட்ட கலைத்திட்டக்குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணனையும் சந்தித்து, ஆலோசனை தெரிவித்தார். அதன் முக்கிய அம்சங்கள்: * பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் மேற்பார்வையில், கல்லுாரிகள் அளவில், 25 ஆண்டுகளாக தன்னாட்சி முறை சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வியிலும், தன்னாட்சி முறை கொண்டு வந்தால், கல்வி முறையை இன்னும் மேம்படுத்தலாம் * கல்வித் தரம் உயர, கல்வி நிறுவனங்களுக்கும், அவற்றை நடத்துபவர்களுக்கும் சுதந்திரம் தர வேண்டும் என, 1986 மற்றும், 1992ம் ஆண்டு, தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்ட உள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கு, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம் * கல்லுாரிக்கு தன்னாட்சி தர, யு.ஜி.சி., சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. ஒரு கல்லுாரி, குறைந்தபட்சம், 10 ஆண்டுகளாவது தொடர்ந்து இயங்க வேண்டும்; மாணவர்களின் கல்வித்தரம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி, ஆய்வக, நுாலக, விடுதி வசதிகள், உள்கட்டமைப்பு போன்ற தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிக் கல்விக்கும் விதிகள் கொண்டு வரலாம் * தன்னாட்சிக்கு விரும்பும் பள்ளிகளின் விண்ணப்பத்தை, நிபுணர் குழு, 30 நாட்களில் பரிசீலித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதன்படி, தன்னாட்சி குறித்து, அரசு முடிவு எடுக்கலாம் * தன்னாட்சி அந்தஸ்து பெறும் பள்ளிகள், தனியாக நிர்வாக குழு, நிதிக்குழு, கல்விக்குழு, பாடத்திட்ட குழு, தேர்வு மற்றும் மதிப்பீட்டுக்குழு போன்றவற்றை உருவாக்கி கொள்ள வேண்டும் * பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம். மேம்படுத்தப்பட்ட கல்வியை, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வழங்கும் போது தான், அது பெரும் சுமையாகவோ, திறமைக்கு அப்பாற்பட்டதாகவோ இருக்காது * பாடத்திட்ட குழுவில் இடம் பெற்றுள்ள, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தொழிற்துறையினர் சேர்ந்து, அவ்வப்போது, பாடத்திட்டத்தை புதுப்பித்து கொள்ளலாம் * தரமான பாடத்திட்டம், மாணவர்களின் செயல்திறன் பரிசோதனை, தேர்வு முறையில் மேம்பாடு போன்ற அனைத்திலும், பள்ளிகளுக்கும், அரசுக்கும் உரிய ஒத்துழைப்பு இருந்தால், சாதாரண பள்ளியையும், தரம் மிக்க பள்ளியாக மாற்றலாம் * பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நியமிக்கப்பட்டுள்ள, உயர்மட்டக் குழுவையே தன்னாட்சி முறைக்கான நடைமுறைகளை வகுக்கச் செய்யலாம். அதற்கான விதிகளை, இந்த ஆண்டு, டிச.,க்குள் முடித்தால், 2018 ஜன., யில் விண்ணப்பங்கள் பெறலாம். 2018, ஜூன் முதல் தன்னாட்சி வழங்கலாம் * இந்த திட்டத்தின் மூலம், சி.பி.எஸ்.இ., மற்றும் சர்வதேச பாடத்திட்டம் மீதுள்ள மோகம் குறைந்து விடும். ஜே.இ.இ., - நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு, நாமே பாடத்திட்டம் உருவாக்கலாம். இதன்மூலம், கல்விப்புரட்சி ஏற்பட்டு, இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக மாறும்.இவ்வாறு, அந்த கருத்துருவில் கூறப்பட்டுள்ளது. உங்கள் கருத்தையும் பகிரலாம்! : * பள்ளிகளுக்கான தன்னாட்சி குறித்த கருத்துரு மற்றும் பாடத்திட்ட மாற்றம் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துகளை, 'தினமலர்' வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். தங்களின் எண்ணங்கள், கருத்துகளை, rlp@dinamalar.in என்ற,'இ - மெயில்' முகவரியில் தெரிவிக்கலாம்.

Monday, August 7, 2017

ஆசிரியர் பணி நிரவல் மீண்டும் நடத்தப்படுமா?

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்களுக்கு கூடுதலான ஆசிரியர்களும், அதிக மாணவர்களுக்கு குறைவான ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆக.1 ஆம் தேதி மாணவர் சேர்க்கை அடிப்படையில் மீண்டும் பணி நிரவல் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஆகஸ்ட் முதல் தேதி அன்று மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து, அதன் அடிப்படையில் பணி நிரவல் நடைபெறுவது வழக்கம். பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறை, தற்போது முதல் முறையாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய கல்வி ஆண்டின் (2016}17) மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நிரவல் நிகழாண்டில் நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வியில் மாவட்டத்திற்குள்ளும், தொடக்க கல்வித்துறையில் வட்டார அளவிலும் ஆசிரியர்கள் பணி நிரவல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2017}18 ஆம் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை என்பது சில பள்ளிகளில் அதிகரித்தும், பல பள்ளிகளில் குறைந்தும் உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல், முன்னதாக ஆசிரியர் பணி நிரவல் நடைபெற்றதன் காரணமாக 2017}18 ஆம் கல்வி ஆண்டில், பல பள்ளிகளிலும் குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்களுக்கு 10 ஆசிரியர்கள் வரை பணிபுரியும் நிலை உள்ளது. அதே நேரத்தில், அதிக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் குறைவான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 160 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் 5 ஆசிரியர்களும், 160க்கும் கூடுதலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமும் பணிபுரியும் வகையில், பணி நிரவல் அமைய வேண்டும் என்பதே அரசின் விதிமுறையாக உள்ளது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக மே மாதமே பணி நிரவல் நடைபெற்றதால், தற்போது பல பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாற்காலிக ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை நடத்துகின்றனர். இதனிடையே, 2017 மே 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பலர் ஓய்வுப் பெற்றுள்ளதால், அந்த காலிப் பணியிடங்களும் தற்போது கூடுதல் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளியில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிவதால் அரசு சார்பில் ஊதியத்திற்காக செலவிடப்படும் பணமும் பயனில்லாமல் போவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், மீண்டும் பணி நிரவல் நடத்தி, உபரியாக உள்ள ஆசிரியர்களைக் கொண்டு, காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கல்வியாண்டின் தொடக்கத்திலோ, இடைப்பட்ட காலத்திலோ ஆசிரியர்கள் பணி ஓய்வு நாள் வந்தாலும், அவருக்கு அந்த கல்வியாண்டின் இறுதி ( மே 31ஆம் தேதி) வரை பணி புரிவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் நிகழாண்டில் மே மாதமே பணி நிரவல் நடத்தப்பட்டதால், அதற்கு பின் ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள் குறித்த பட்டியல் கணக்கிடப்படவில்லை. மேலும், ஆகஸ்ட் முதல் நாளிலேயே மாணவர் சேர்க்கை விவரம் சேகரிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பணி நிரவல் நடத்தப்பட்டதால், தற்போது உபரி பணியிடங்கள் மற்றும் பற்றாக்குறை பிரச்னை எழுந்துள்ளது. மே மாதம் நடைபெற்ற பணி நிரவலின் போதும், மாவட்ட வாரியாக ஒரு பாடத்திற்கு 10க்கும் குறைவான பணியிடங்களுக்கு மட்டுமே பணி நிரவல் நடைபெற்றன. வட மாவட்டங்களில் குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மீண்டும் முறையாக பணி நிரவல் நடைபெற்றால் மட்டுமே, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்றார்.

புதிய பாடத்திட்டம் தயாரிப்பு - 4 இடங்களில் கருத்து கேட்பு.

புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, மதுரை, கோவை உட்பட, நான்கு இடங்களில், கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கலைத்திட்ட வடிவமைப்புக்குழு மற்றும் உயர்மட்டக்குழு என, இரு குழுக்களை, தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுக்களின் ஆலோசனை கூட்டம், ஜூலையில் நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாவது முறையாக, டி.பி.ஐ., வளாகத்தில், கலைத்திட்டக்குழு கூடி ஆலோசித்தது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடமும், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, வரும், 9ல், மதுரை; 11ல், கோவை; 22ல், சென்னை; 24ல், தஞ்சாவூர் என, நான்கு இடங்களில் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி விபரம் பெறலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, பாடத்திட்டம் குறித்து, கருத்துக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு; முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், நாடு முழுவதும் ஆசிரியர் தின மாக கொண்டாடப்படுகிறது. இதில், மாநிலங் களில் தனித்தனியாகவும், தேசிய அளவில் தனியாகவும், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, மாநில அளவில் விருது பெறு வோரின் பட்டியலை, வரும், 20க்குள், மாநில குழுவுக்கு அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், 'மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத் திய, முன்மாதிரியான ஆசிரியர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.'அவர்கள் விண்ணபிக்க வில்லை என, விட்டு விடக்கூடாது. புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை பரிந்துரைக்க கூடாது' என, தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு, நல்லாசிரியர் விருது வழங்கியதில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. அதிகாரிகளின் உறவினர்கள், மேல் அதி காரிகளுக்கு வேண்டியவர்கள், ஆசிரியர் சங்கத் தினருக்கு நெருங்கியவர்கள், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருக்கு, இந்த விருது வழங்க, சிபாரிசு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நடைமுறை, பள்ளிக்கல்வி செயலர், உதய சந்திரன், இயக்குனர், இளங்கோவன் கூட்டணி யில், மாற்றப்படும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ள னர். அதேபோல, 2016 குழுவில் இடம் பெற்ற அதி காரிகளே, தங்கள் பெயரை சிபாரிசு செய்த சம்பவங்களும் நடக்காது என, நம்பிக்கையில் உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரி யர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறுகை யில், ''பாடம் நடத்துவதிலும், மாணவர்கள் மீதும், பள்ளிக்கல்வியின் உண்மையான வளர்ச் சியில் அக்கறை காட்டுவோருக்கும் நல்லா சிரியர் விருது, வழங்கப்பட வேண்டும். ''எனவே, இதற்கான விதிகளை, பொதுமக்களின் கருத்து கேட்டு மாற்றுவது அவசியம்,'' என்றார்.

Sunday, August 6, 2017

சிறப்பாசிரியர் தேர்வில் அரசாணை மீறல் டி.டி.சி கல்வி தகுதியை புறக்கணிக்கும் டிஆர்பி.

"தமிழகத்தில், கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை எண் 185ஐ தமிழக அரசு வெளியிட்டது. இந்த அரசாணையில், ‘நீதிமன்ற உத்தரவுப்படி போட்டித்தேர்வு மூலம் நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் பள்ளிகளில் நிரப்பப்படும். போட்டித்தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடக்கும். இதில் 195 கேள்வி கேட்கப்படும். என்சிசி, என்எஸ்எஸ், வேலைவாய்ப்பு பதிவு உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு 5 மதிப்பெண் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தயாரித்த சிறப்பாசிரியர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. ஆனால், தேர்வு நடத்தவில்லை. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டுக்கு பின் நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால், தமிழக பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செங்கோட்டையன், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய 4 பாடங்களில் 1,188 பணியிடம், விவசாய பாடத்தில் 25 பணியிடம் என 1,123 பணியிடம் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்றார். இந்த தேர்வு, வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது. விண்ணப்பிக்க, காலஅட்டவணை குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. 2012ம் ஆண்டு வரை நடந்த நிரந்தர சிறப்பாசிரியர் பணி நியமனத்தில், 1985ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 753ன்படி கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி, தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, முன்னுரிமை இனசுழற்சி ஆகிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. சிறப்பாசிரியர் நியமனத்திற்கு இதே கல்வித்தகுதியை அரசாணை 185ஐ கூறுகிறது. ஆனால், தற்போது டிஆர்பி இணையதளத்தில் சிறப்பாசிரியர் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ தேர்ச்சி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, அரசாணை கூறிய கல்வித்தகுதி தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மற்றும் சிறப்பாசிரியர்கள் அடிப்படையான அரசு தொழில்நுட்ப தேர்வு தேர்ச்சி குறித்து டிஆர்பி இணையதளத்தில் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட இரு முக்கிய கல்வித்தகுதி குறிப்பிடப்படாததால், தேர்வர்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக டி.டி.சி பயிற்சி நடத்தாமல் உள்ளது. டி.டி.சி கல்வித்தகுதி அவசியம் என்றால், 20 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பார்கள். டி.டி.சி கல்வித்தகுதி இல்லையென்றால், அதனை முடிக்காத பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட 1.50 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசாணை தொழில்நுட்ப தேர்வு தேர்ச்சி, டி.டி.சி பயிற்சி கல்வித்தகுதி எனக்கூறும் நிலையில், டிஆர்பி கல்வித்தகுதியை வெளியிட்டு தேர்வர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குழப்பமான அறிவிப்பு உள்ளதால் தேர்வர்கள் தேர்வு எழுத முடியுமா? முடியாதா? என்ற அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளிக்கவேண்டும் என தேர்வர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது." - சிறப்பாசிரியர் தேர்வில் அரசாணை மீறல் டி.டி.சி கல்வி தகுதியை புறக்கணிக்கும் டிஆர்பி http://tz.ucweb.com/8_r0ca

5, 8ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டுவரப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை கொண்டு வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு, 24 மாநிலங்கள் தங்களது ஒப்புதலை அளித்துள்ளன. இந்த பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணாக்கர்கள், அதே ஆண்டு மே மாதம் மீண்டும் மறுதேர்வு எழுதலாம். அதிலும் மாணாக்கர்கள் வெற்றியடைய முடியாத பட்சத்தில், தோல்வியடைந்தவர்களாக கருதப்படுவர். அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாடு சுதந்திரமடையும்போது, கல்வி கற்றோர் எண்ணிக்கை வெறும் 18 சதவீதமாக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், நமது நாட்டில் கல்வி கற்றோர் எண்ணிக்கை 100 சதவீதமாக உயரும். நாட்டின் பல்வேறு இடங்களில், உலகத் தரத்திலான 20 பல்கலைக்கழகங்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது. புதிய கல்விக் கொள்கை: கல்வியின் தரம் உள்ளிட்ட 5 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது என்றார் ஜாவடேகர்.

தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.

சென்னை, சென்னை, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஏற்புடன், முழு நேர தமிழ் எம்.பில்., பட்டவகுப்பில் சேர,

எல்லா பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

''அந்தந்த பள்ளிகளிலேயே, அரசு பொதுத் தேர்வு எழுதும் வகையில், தேர்வு மையம் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை 

போலீசார் தடுத்தும் ஆர்ப்பாட்டத்தில் குவிந்த ஆசிரியர், அரசு ஊழியர்கள்.


                                போலீசார் தடுத்தும் ஆர்ப்பாட்டத்தில் குவிந்த ஆசிரியர், அரசு ஊழியர்கள்

சென்னை, போலீசார் பல இடங்களில் தடுத்து நிறுத்தியும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் குவிந்தனர்.

Saturday, August 5, 2017

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள் நகலை மாணவர்கள் சனிக்கிழமை (ஆக.5) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன் -ஜூலை மாதங்களில் நடந்த பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பம் செய்தவர்கள் சனிக்கிழமை (ஆக.5) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முற்பகல் 1 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தேர்வெழுதியவர்களின் பதிவெண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாளின் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறு கூட்டலுக்கு ஆக.7-இல் விண்ணப்பிக்கலாம்: விடைத்தாளின் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து வரும் 7 -ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 9 -ஆம் தேதி (புதன்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ - ஜியோ' பேரணிக்கு தடை : ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் அனுமதி.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின் பேரணிக்கு தடை விதித்துள்ள போலீசார், 15 நிபந்தனைகளுடன், ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்துள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், 73 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு, கோரிக்கை களை வலியுறுத்தி, ஜூலை, 18ல், மாவட்ட தலைநகரங்களில், ஆர்ப்பாட்டம் நடத்தியது.இரண்டாம் கட்டமாக இன்று, சென்னை மன்றோ சிலையிலிருந்து, கோட்டை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கோட்டை நோக்கி பேரணி செல்ல, தமிழக போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. இதை அடுத்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த, ஜாக்டோ - ஜியோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.'அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்; அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு இன்றியும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையிலும், ஆர்ப்பாட்டம் நடத்தலாம். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எங்கும் கூடக்கூடாது; மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்பது உள்ளிட்ட, 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.இதற்கிடையில், போராட்டத்தில் பங்கேற்க செல்வோரின் விபரங்களை, மாவட்டம், வட்டம் வாரியாக, போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Thursday, August 3, 2017

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை; இரண்டு வாரங்களில் தாக்கல்.

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு அறிக்கை, இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது. சதமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்க ளுக்கு, 13 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப் படவில்லை. அதனால், பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வ தற்கான நுழைவு தேர்வுகளில், தேர்ச்சி பெற முடிவதில்லை. எனவே, பாடதிட்டத்தை மாற்ற, கல்வியாளர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து, ஒன்று முதல், பிளஸ் 2 வரை புதிய பாடத் திட்டத்தை உருவாக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு சார்பில், சென்னையில், ஜூலை, 20ல், கருத்தரங்கம் நடந்தது. ஜூலை, 25ல், உயர் மட்ட குழு கூட்டம்நடந்தது. இதில், பாடத் திட்ட தயாரிப்பு குறித்து, கொள்கை முடிவுகள் எடுக்கப் பட்டன. ஜூலை, 21, 22ம் தேதிகளில், ஆசிரியர்கள், பேரா சிரியர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவின், பாடத்திட்ட கருத்தரங்கம், சென்னையில் நடந்தது.இதில், பாடத்திட்டம் எப்படி இருக்க வேண் டும் என, கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள் ளன. மேலும், கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநில பாடத்திட்டங்கள், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ். இ., - கேம் பிரிட்ஜ் போன்ற பாடத்திட்டங்களும், ஆய்வு செய்யப்படுகின்றன. இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: பாடத்திட்டத்தை இறுதி செய்யும் முன், முதற்கட்டமாக,கலைத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இந்த கலைத்திட்டம் என்பது, பாடதிட்ட வரை வாக இருக்கும். சர்வதேச அளவில், தரமான பாடத் திட்டத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதற் கான, வரைவு அறிக்கை, இன்னும் 2 வாரங்களில், பொதுமக்கள் பார் வைக்கு வெளி யிடப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்வதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், நாடு முழுவதும் சர்வதேசத் தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறை ரத்து விவகாரம் குறிப்பிடத்தக்க ஒன்று. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அதனை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டது. அதாவது 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயத் தேர்ச்சி அளிக்க வேண்டும் எனவும், அதுவும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்திய பிறகே அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் எனவும் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. அதுதொடர்பான அம்சங்கள் அடங்கிய மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தவிர, நாடு முழுவதும் சர்வதேசத் தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடக்குமா?

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பிளஸ் 1 பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு.

பிளஸ் 1 அரசு பொது தேர்விற்கு மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பாட ஆசிரியர்களிடம் கல்வித்துறை ஒப்புதல் கோரியுள்ளனர். 


இந்தாண்டு முதல் பிளஸ் 1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக மாற்றியுள்ளது. புதிய பாடத்திட்டம் மூலம் பிளஸ் 1 தேர்வில், ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண்கள் வீதம் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவார்கள். இதில் பாடத்திற்கு 90 மதிப்பெண் தேர்வு எழுத வேண்டும். 10 மதிப்பெண் வகுப்பறை தேர்வாக நிர்ணயிக்கப்படும்.


செய்முறை தேர்வு பாடங்களில் எழுத்து தேர்வு 70 மதிப்பெண்ணும், 20 மதிப்பெண் செய்முறை தேர்வுக்கு வழங்கப்படும். 10 மதிப்பெண் வகுப்பறை மதிப்பெண்ணாக வழங்கப்படும். 


செய்முறை தேர்வு இல்லாத பாடங்கள்: 


செய்முறை தேர்வு இல்லாத பாடங்களுக்கு, கொள்குறி வினா ஒன்றிற்கு ஒரு மதிப்பெண் வீதம் 20 கேள்விகள். குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண் வீதம் 7 கேள்விகள். 


சிறு வினாக்கள் ஒன்றுக்கு 3 மதிப்பெண் வீதம் ஏழு கேள்விகள். பெரு வினாக்கள் ஒரு கேள்விக்கு 5 மதிப்பெண் வீதம் 7 கேள்விகள் என மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.


செய்முறை தேர்வு பாடங்கள்: 


செய்முறை தேர்வு உள்ள பாடங்களில் கொள்குறி வகை வினா ஒன்றிற்கு ஒரு மதிப்பெண் வீதம் 15 கேள்விகள். குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண் வீதம் 6 கேள்விகள். சிறுவினாக்களுக்கு 3 மதிப்பெண் வீதம் 6 கேள்விகள், பெரு வினாவிற்கு 5 மதிப்பெண் வீதம் 5 கேள்விகள் என மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும்.


உயிரியல் பாடம்: உயிர் -தாவரவியல், உயிர் - விலங்கியல் பாடத்தில் கொள்குறிவினா ஒன்றிற்கு ஒரு மதிப்பெண் வீதம் 8 கேள்விகளும், சிறு வினாக்களுக்கு 2 மதிப்பெண் வீதம் 6 வினாக்கள், பெரு வினாக்களுக்கு 5 மதிப்பெண் வீதம் 3 வினாக்கள் கேட்கப்படும். இதில் உயிர்தாவரவியல் பாடத்தில் 35 மதிப்பபெண், உயிர் விலங்கியல் பாடத்தில் 35 மதிப்பெண் வீதம் வழங்கப்படும்.


ஆசிரியர் கருத்து கேட்பு: 


தற்போது தயாரிக்கப்பட்டும் மாதிரி வினாத்தாள் பாட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் ஒப்புதலை பொருத்து மாதிரி வினாத்தாள் பொதுத்தேர்வில் அறிமுகம் செய்யப்படும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

பிளஸ் 1 பொது தேர்வில் சட்ட சிக்கல்!

                                      

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல்.

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு அறிக்கை, இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது.

Tuesday, August 1, 2017

ஜாக்டோ- ஜியோ பொதுக்குழு கூட்டம்.

தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர், பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. வரும் 5 ம் தேதி, நடக்கவுள்ள மாநிலம் தழுவிய போராட்டம் குறித்து, இதில் ஆலோசிக்கப்பட்டது. தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் கூறுகையில், ”எட்டாவது ஊதியக்குழு மாற்றங்களை, உடனடியாக கொண்டு வர வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள, குறைபாடுகள் களையப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட, மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ சார்பில், கடந்த 18 ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அரசு செவிசாய்க்காததால், வரும் 5 ம் தேதி, சென்னையில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ’இப்போராட்டத்தில், கோவை மாவட்டத்தில் இருந்து, 10 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது.

தேர்தல் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது’ என, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும். 1987-1989 வரை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்காலத்தை, ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் முறைப்படுத்த வேண்டும். புதிய பாடத்திட்ட அமைப்பு குழுக்களில், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை இணைத்து கொள்வதோடு, அனைத்து பாட குழுக்களிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடம் பெறுவதை, தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். தேர்தல் பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது. ஆசிரியர்களை ஆதார் கணக்கெடுப்பு, வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், வேலை வாய்ப்பு பதிவு செய்தல், மற்றும் சுகாதார பணிகளான தடுப்பூசி மற்றும் மாத்திரைகள் வழங்கல் போன்ற பணிகளை செய்ய வலியுறுத்தக் கூடாது. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பத்து கம்ப்யூட்டர் வழங்கி, வைபை இண்டர்நெட் இணைப்பு ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் தகுதி வாய்ந்த கணினி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

'நாக்' தர மதிப்பீடு கட்டாயம் : யு.ஜி.சி., தலைவர் கண்டிப்பு.

'அனைத்து கல்லுாரிகளும், மத்திய அரசின், 'நாக்' தர மதிப்பீடு பெறுவது கட்டாயம்' என, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.